தாமிரபரணி தண்ணீரின் ருசியிலேயே
தாகத்தை தொலைத்திட்ட நெல்லை மக்கள்...
வைகைத் தண்ணீரின் ருசியிலேயே
வாழ்க்கையை வாழ்ந்திட்ட மதுரை மக்கள்...
சிறுவாணி தண்ணீரின் ருசியிலேயே
சிறப்பாய் வாழ்ந்திட்ட கோவை மக்கள்...
காவேரியின் ருசி எங்கும் வராது என்று
கர்வத்தோடு வாழ்ந்திட்ட தஞ்சை மக்கள்...
"உனக்கு எந்த நீரின் ருசி பிடிக்கும்?" என்றதற்கு
"அக்வாபினா" என்று சொல்லி செல்கிறான்
ஆறுகளை வரைபடத்தில் மட்டுமே கண்டு
ஆற்று நீரின் ருசியை வாய்ச்சொல்லாக
மட்டுமே கேட்டு வளர்ந்திட்ட
மினரல் வாட்டர் தலைமுறையினனான
என் மகன்....
No comments:
Post a Comment